காலை உணவு திட்டம் கலெக்டர் அறிவுரை
திருவள்ளூர்:வாரந்தோறும் மகளிர் திட்ட அலுவலர்கள் காலை உணவு திட்டம் குறித்து, ஆய்வு செய்து, எவ்வித தொய்வும் இல்லாமல் செயல்பட வேண்டும் என, கலெக்டர் அறிவுறுத்தினார்.திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் முதல்வரின் காலை உணவு திட்டம் குறித்து, மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு கூட்டம் நடந்தது.இக்கூட்டத்திற்கு கலெக்டர் பிரதாப் தலைமை வகித்து பேசியதாவது:காலை உணவு திட்ட பணிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறித்து வட்டார கல்வி அலுவலர்கள் பதிவிட வேண்டும். உணவு உண்ணும் மாணவர்களின் எண்ணிக்கை குறையாமல் வட்டார வளர்ச்சி அலுவலர் அவ்வப்போது காலை உணவு வழங்கப்படும் மையத்தில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.மேலும், இந்த திட்டத்தில் மாணவர்களின் எண்ணிக்கையினை மேம்படுத்த, அவர்களின் சதவீதத்தை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வாரந்தோறும் மகளிர் திட்ட அலுவலர்கள் காலை உணவு திட்டம் தொடர்பாக ஆய்வு கூட்டம், திட்ட பணிகளில் எவ்வித தொய்வு இல்லாமல் சிறப்பாக செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயகுமார், மகளிர் திட்ட இயக்குநர் செல்வராணி, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மோகனா உட்பட பலர் பங்கேற்றனர்.