உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணியில் 300 கர்ப்பிணியருக்கு சமுதாய வளைகாப்பு 

திருத்தணியில் 300 கர்ப்பிணியருக்கு சமுதாய வளைகாப்பு 

திருத்தணி, திருத்தணி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, திருத்தணி தாலுகாவில் வசிக்கும், 300 கர்ப்பிணியருக்கு சமுதாய வளைகாப்பு விழா, கே.ஜி.கண்டிகையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.விழாவில் திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன் பங்கேற்று, கர்ப்பிணியருக்கு புடவை, மஞ்சள், குங்குமம், பூ, வளையல், பழங்கள், இனிப்புகள் ஆகியவற்றை சீர்வரிசையாக வழங்கினார். விழாவில் பங்கேற்ற கர்ப்பிணியர் மற்றும் பெண்களுக்கு ஐந்து வகையான சாதங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் திருத்தணி வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் காஞ்சனா, மருத்துவ அலுவலர் கலைவாணி மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை