உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கள்ளச்சாராய கெடுபிடி டேங்கர் லாரிகள் சோதனை

கள்ளச்சாராய கெடுபிடி டேங்கர் லாரிகள் சோதனை

கும்மிடிப்பூண்டி, ள்ளக்குறிச்சி மாவட்ட கள்ளச்சாராய உயிரிழப்பு எதிரொலியாக மெத்தனால் பயன்பாடு மீதான கெடுபிடிகளை தமிழக அரசு கடைபிடித்து வருகிறது. கும்மிடிப்பூண்டி பகுதியில் மெத்தனால் பயன்படுத்தும் தொழிற்சாலைகளில் போலீசார் தீவிர ஆய்வு செய்தனர்.ஆந்திர மாநிலம் வழியாக பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குள் வரும் டேங்கர் லாரிகளை, போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். சென்னை - - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில், ஆந்திர எல்லையோர தமிழக சோதனைச்சாவடி அமைந்துள்ளது.இந்த சோதனைச்சாவடி வழியாக தமிழகத்திற்குள் வரும் டேங்கர் லாரியில் மெத்தனால், எத்தனால், கச்சா எண்ணெய், சமையல் எண்ணெய் உள்ளிட்டவை ஏற்றி வரப்படுகின்றன.நேற்று, 15க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிளை சோதனையிட்ட போலீசார் அதன் ஆவணங்களை சரி பார்த்து, அவை சென்று சேரும் இடத்தை உறுதி செய்தபின் தமிழகத்திற்கு அனுமதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி