தொழிற்சாலைகளுக்கு இடையே நடந்த கிரிக்கெட் போட்டி
கும்மிடிப்பூண்டி:சென்னை பிரசாந்த் மருத்துவமனை, கும்மிடிப்பூண்டி சிப்காட் உற்பத்தியாளர்கள் சங்கம், சோழவரம் முதல், ஸ்ரீசிட்டி வரை உள்ள தொழிற்சாலைகளின் மனித வளத்துறை அமைப்பு, ரோட்டரி சங்கம், அலமேலு நினைவு அறக்கட்டளை சார்பில், தொழிற்சாலைகளுக்கு இடையேயான, எட்டு ஓவர் கிரிக்கெட் போட்டி நடந்தது.கவரைப்பேட்டை அருகே, டி.ஜெ.எஸ்., கல்வி குழும வளாகத்தில், இரு வாரமாக நடந்த போட்டியில், 36 அணிகள் கலந்து கொண்டனர். நேற்று நடந்த இறுதி போட்டியில், கும்மிடிப்பூண்டி சிப்காட் வெஸ்டன் தாம்சன் அணி, ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில், தேர்வாய் கண்டிகை சிப்காட் மிஷ்லின் அணியை வென்றது.கும்மிடிப்பூண்டி தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தராஜன் தலைமையில் நடந்த பரிசளிப்பு விழாவில், பிரசாந்த் மருத்துவமனை இயக்குனர் பிரசாந்த் கிருஷ்ணா, தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் ஜூனியர் அணி தேர்வாளர் ராஜ்குமார் உட்பட பலர் முன்னிலை வகித்தனர். முதல் இடம் பிடித்த அணிக்கு, கோப்பையுடன், 50,000 ரூபாய்க்கான காசோலை, இரண்டாவது இடம் பிடித்த அணிக்கு, கோப்பையுடன், 25,000 ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டன.