உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இடி தாக்கியதில் மரம் முறிந்து சேதம்

இடி தாக்கியதில் மரம் முறிந்து சேதம்

திருத்தணி: திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில், நேற்று மாலை 6:15 - இரவு 7:00 மணி வரை இடியுடன் பலத்த பெய்தது. இதனால், திருத்தணி சாலைகளில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து சாலையில் ஓடியது.இந்நிலையில், திருத்தணி அடுத்த பட்டாபிராமபுரம் கிராமத்திற்கு செல்லும் சாலையோரம் இருந்த வேப்பமரத்தின் மீது இடி தாக்கியது. இதில், வேப்பமர கிளைகள் உடைந்து, மரம் முறிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக, மரத்தின் கீழ் மழைக்கு யாரும் ஒதுங்காததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்