சேதமடைந்த சிமென்ட் சாலை ஊராட்சி நிர்வாகம் அலட்சியம்
திருத்தணி, திருத்தணி ஒன்றியம் பட்டாபிராமபுரம் ஊராட்சிக்குட்பட்டது ஆசிரியர் நகர். இங்குள்ள நீலகண்டன் தெருவில், 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த, 6 ஆண்டுகளுக்கு முன் ஊராட்சி சார்பில் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் அந்த தெருவில் புதியதாக மழைநீர் வடிகால்வாய் ஊராட்சி நிர்வாகம் அமைத்தது. கால்வாய் கட்டுவதற்கு தோண்டிய மண் மற்றும் ஜல்லி கற்களை சிமென்ட் சாலை அமைக்கும் தெருவில் கொட்டினர். கால்வாய் பணி முடிந்ததும், ஊராட்சி நிர்வாகம் சிமென்ட் சாலையில் கொட்டிய மண், ஜல்லிகற்களை அகற்றாமல் இருந்ததால், தற்போது தெரு முழுதும் ஜல்லிகள் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் விழுந்து காயத்துடன் செல்கின்றனர். ஊராட்சி நிர்வாகம் அலட்சியத்தால் நீலகண்டன் தெரு முழுதும் சேதம் அடைந்துள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்கின்றனர்.