உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஆபத்தான சாலை திருப்பம் வாகன ஓட்டிகள் அவதி

ஆபத்தான சாலை திருப்பம் வாகன ஓட்டிகள் அவதி

பள்ளிப்பட்டு, பள்ளிப்பட்டு நகரில் இருந்து பொதட்டூர்பேட்டை வழியாக திருத்தணி செல்லும் சாலையில் அமைந்துள்ளது கீச்சலம் கிராமம். இந்த சாலையில், பொதட்டூரில் இருந்து திருத்தணி வரையிலான, 25 கீ.மீ., துாரம் கொண்ட சாலையில் ஏராளமான சாலை திருப்பங்கள் உள்ளன. இதில், கீச்சலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட திருப்பங்கள் உள்ளன. இந்த குறுகலான திருப்பங்களில் எதிரில் வரும் வாகனங்களை கவனிக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். விபத்து நேரிடும் அபாயம் உள்ளது. இந்த திருப்பங்களில், பிரதிப்பலிப்பு கண்ணாடிகளை பொருத்த வேண்டும் என பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை