உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சுரங்கபாதை பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

சுரங்கபாதை பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டி:ஒன்றரை ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட ரயில்வே சுரங்க பாதை பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி, ரயில் பாதை அருகே மீனவ கிராம மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திர மாநிலம் பெரியவேட்டு குப்பம், பாலாஜி குப்பம், பக்கீர்கண்டிகை ஆகியவை மீனவ கிராமங்களாகும். அந்த கிராமத்திற்கு செல்லும் வழியில் ரயில்வே கேட் ஒன்று இருந்தது. அங்கு சுரங்க பாதை அமைக்கும் பணிக்காக, கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் ரயில்வே கேட் மூடப்பட்டது. இரு பக்கமும் பள்ளம் எடுத்ததுடன், பணி முடங்கியது.பல முறை புகார் அளித்தும் பணி மேற்கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. இதனால், 2 கி.மீ., மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலைக்கு மேற்கண்ட கிராம மக்கள் தள்ளப்பட்டனர்.பொறுமை இழந்த கிராம மக்கள், நேற்று ரயில் மறியல் போராட்டம் அறிவித்தனர். தகவல் அறிந்து சென்ற, ஆந்திர மாநில, தடா போலீசார் கிராம மக்களை சமாதானம் செய்தனர். அதன்பின் ரயில் பாதை அருகே பந்தல் போட்டு அமர்ந்து, 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கிராம மக்கள் ரயில் மறியல் போராட்டம் மேற்கொள்ளாமல் இருக்க, முன் எச்சரிக்கையாக கும்மிடிப்பூண்டி ரயில்வே பாதுகாப்பு படையினர், தடா போலீசார், கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் என 60க்கும் மேற்பட்டோர் அங்கு குவிக்கப்பட்டனர்.தகவல் அறிந்து சென்ற ரயில்வே மண்டல பொறியாளர் விகாஷ் யாதவ், உடனடியாக பணிகள் துவங்கி, அடுத்த நான்கு மாத காலத்திற்குள் முடிக்கப்படும் என உறுதி அளித்தார். அதன்பின் கிராம மக்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி