உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வேளகாபுரத்தில் சுடுகாட்டு பிரச்னை உண்ணாவிரதத்திற்கு அனுமதி மறுப்பு

வேளகாபுரத்தில் சுடுகாட்டு பிரச்னை உண்ணாவிரதத்திற்கு அனுமதி மறுப்பு

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அருகே, வேளகாபுரம் கிராமத்தில் இருந்து, 400 மீட்டர் துாரத்தில் உள்ளது சுடுகாடு. இங்கு அரசு சார்பில், 80 ரூபாய் ஆயிரம் மதிப்பில் எரிமேடையும்கட்டப்பட்டு உள்ளது. இப்பகுதி மக்கள் இறந்தவுடன் அந்த சுடுகாட்டில் உடல்களை புதைத்தும், எரித்தும் வந்தனர். கிராமத்தில் ஒரு கோஷ்டியினர் அங்கு புதைக்காமல் தங்களது சொந்த இடங்களில் புதைத்து வந்தனர்.சுடுகாட்டுப் பிரச்சனை பெரிய அளவில் வெடித்த நிலையில், ஒவ்வொரு முறையும் யாராவது இறந்தால் புதைக்க அல்லது எரிக்க எழுந்த பிரச்சனையால், வருவாய், போலீஸ் ஆகியோர் சமாதானம் செய்து பிரச்சனையை முடித்து வந்தனர். புதிதாக வேறு சுடுகாடு அமைக்க கிராமத்தில் உள்ள தனியார் ஒருவர் கொடுத்த இடத்தில் அமைத்து தர வேண்டும் என வருவாய்த் துறையினர் வசம்மனு வழங்கப்பட்டது. ஆனால் அந்த இடத்திற்கு செல்லும் பாதையில் நீர்நிலை வருவதால் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.இதை வலியுறுத்தி ஒரு பிரிவினர் உண்ணாவிரத போராட்டம் நடத்த பெரியபாளையம் காவல் நிலையத்தில் மனு கொடுத்தனர். ஆனால் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வருவாய்த் துறையினர் பேச்சு நடத்தி, மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்து தீர்வு காண வலியுறுத்தினர். இதற்கு அவர்கள் ஒப்புக் கொண்டு அடுத்த சில தினங்களில் கலெக்டரிடம் மனு கொடுக்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை