| ADDED : ஏப் 05, 2024 12:21 AM
சோளிங்கர்:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில், யோக நரசிம்ம சுவாமி மலைக்கோவில் அமைந்துள்ளது. பெரிய மலை அடிவாரத்தில் ரோப்கார் மையத்திற்கு செல்லும் சாலையோரம், தி.மு.க., சார்பில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், இந்த சுவர் விளம்பரம் அரைகுறையாக மறைக்கப்பட்டுள்ளது. சுண்ணாம்பு கொண்டு மறைத்திருந்தாலும், அந்த விளம்பரம் படிக்கக்கூடிய அளவிற்கு தெளிவாக உள்ளது. தேர்தல் அலுவலர்கள் இந்த சுவர் விளம்பரத்தை அழிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பகுதிவாசிகளும் எதிர்பார்க்கின்றனர்.