உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஆக்கிரமிப்பில் சிக்கி குறுகலான சாலை பேருந்து இல்லாமல் பகுதிவாசிகள் தவிப்பு

ஆக்கிரமிப்பில் சிக்கி குறுகலான சாலை பேருந்து இல்லாமல் பகுதிவாசிகள் தவிப்பு

கடம்பத்துார்,: தண்டலம் -- அரக்கோணம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட குமாரசேரி ஊராட்சி.இந்த ஊராட்சி வழியே கூவம், ஏலம்பாக்கம், புதுப்பட்டு வழியாக, சுங்குவார்சத்திரம் செல்லும் நெடுஞ்சாலை உள்ளது.இந்த நெடுஞ்சாலையின் இருபுறமும் குடியிருப்போர், சாலையை ஆக்கிரமித்து வருகின்றனர். இதனால் நெடுஞ்சாலை குறுகலாகி, இவ்வழியே கூவம், ஏலம்பாக்கம், புதுப்பட்டு வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.மேலும் இவ்வழியாக இயக்கப்பட்ட தடம் எண் 155, டி-45 என்ற இரு அரசு பேருந்துகள் மற்றும் ஒரு தனியார் பேருந்து என மூன்று பேருந்துகள் மாற்று வழியில் செல்வதால் இப்பகுதிவாசிகள் ஐந்தாண்டுகளுக்கு மேலாக சிரமப்பட்டு வருகின்றனர்.எனவே மாவட்ட நிர்வாகம் இப்பகுதியில் ஆய்வு செய்து நெடுஞ்சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிககை விடுத்துள்ளனர்.இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கூவம் ஊராட்சி வழியாக சுங்குவார்சத்திரம் செல்லும் நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு குறித்து வருவாய்த்துறையினருக்கு தகவல் அளித்துள்ளோம். விரைவில் வருவாய்த்துறையினருடன் இணைந்து ஆக்கிரமிப்பு அகற்றி சாலை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்