உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ரயில் மோதி மூதாட்டி உயிரிழப்பு

ரயில் மோதி மூதாட்டி உயிரிழப்பு

திருத்தணி:திருத்தணி ஒன்றியம் பெரியகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நரசிம்மன் மனைவி ராணி, 65. இவர், நேற்று காலை உடல்நிலை சரியில்லாததால், திருத்தணி அரசு மருத்துவமனைக்கு சென்றார். பின், சிகிச்சை முடிந்து மாத்திரைகளை வாங்கிக் கொண்டு, திருத்தணி பேருந்து நிலையத்தை நோக்கி நடந்து வந்தார்.அப்போது, மேட்டு தெரு அருகே ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, சென்னையில் இருந்து திருத்தணி நோக்கி சென்ற விரைவு ரயில் மோதி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.தகவல் அறிந்து வந்த அரக்கோணம் ரயில்வே போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ