மேலும் செய்திகள்
மயங்கி விழுந்த முதியவர் உயிரிழப்பு
29-Aug-2024
திருவள்ளூர்: திருவாரூர் மாவட்டம் முகுந்தனுாரைச் சேர்ந்தவர் சரவணன், 49. இவர், கடம்பத்துார் ஒன்றியம் பாப்பரம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில், இரு மாதங்களாக ஹெல்பராக பணிபுரிந்து வந்தார். கடந்த 23ம் தேதி மாலை 6:30 மணிக்கு, அவர் தங்கியிருந்த இடத்திலிருந்து அருகில் உள்ள கடைக்கு டீ சாப்பிட சென்றார். அப்போது, திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மணவாளநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
29-Aug-2024