உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மின்னணு பண பரிவர்த்தனை வாயிலாக விவசாயிகள் இடுபொருள் பெற வசதி

மின்னணு பண பரிவர்த்தனை வாயிலாக விவசாயிகள் இடுபொருள் பெற வசதி

திருவள்ளூர்: விவசாயிகளுக்கு, மின்னணு பண பரிவர்த்தனை வாயிலாக இடுபொருள் வழங்கும் வசதி துவக்கப்பட்டு உள்ளது.திருவள்ளூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் முருகன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண் இயக்குனர் ஆகியோர் உத்தரவின்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களிலும், மின்னணு பண பரிவர்த்தனை வாயிலாக விவசாயிகள் தேவையான இடு பொருட்கள் பெறும் வசதி துவக்கப்பட்டு உள்ளது. விவசாயிகள், சம்பா பருவத்திற்கு தேவையான விதை, உயிர் உரம், ஜிங்க் சல்பேட், ஜிப்சம் உள்ளிட்ட இடுபொருட்களை. ஏ.டி.எம்., கார்டு, கூகுள்பே, போன்பே உள்ளிட்ட மின்னணு வசதிகள் வாயிலாக பெறுவதற்கான வசதி செய்யப்பட்டு உள்ளது.எனவே, இடுபொருட்களை வாங்க வேளாண் விரிவாக்க மையங்களுக்கு வரும் விவசாயிகள், முழு தொகை அல்லது பங்களிப்பு தொகையினை மின்னணு பண பரிவர்த்தனை வாயிலாக செலுத்தி, பெற்றுக் கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி