உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கிணறுகளுக்கு மின்இணைப்பு வழங்க விவசாயிகள் கோரிக்கை

கிணறுகளுக்கு மின்இணைப்பு வழங்க விவசாயிகள் கோரிக்கை

திருத்தணி:திருத்தணி அரக்கோணம் சாலையில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் திருவள்ளூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சேகர் தலைமையில் நடந்தது. திருத்தணி மின்வாரிய செயற்பொறியாளர் பாஸ்கர் வரவேற்றார். இதில், திருத்தணி கோட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் மின்நுகர்வோர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். இதில், கே.ஜி.கண்டிகை கிராமத்தில் குறைந்த அழுத்த மின்சாரம் வருவதால், விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். ஆகையால் கே.ஜி.கண்டிகை பகுதியில் தனியாக ‛பீடர்' அமைத்து மின்வினியோகம் செய்ய வேண்டும். விவசாய கிணறுகளுக்கு மின்இணைப்புகள் விரைந்து வழங்க வேண்டும். அதே போல் மும்முனை மின்சாரம் கூடுதல் நேரம் வினியோகம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை