உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அரசு பள்ளி மாணவிக்கு உதவிய முன்னாள் கல்வி அலுவலர்

அரசு பள்ளி மாணவிக்கு உதவிய முன்னாள் கல்வி அலுவலர்

திருத்தணி:திருத்தணி அமிர்தாபுரம் பகுதியில் வசிப்பவர் லட்சுமி, 38. இவருக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இவர் வாடகை வீட்டில் தங்கிருந்து, சித்துார் சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் வேலை செய்து, மகள், மகனை மேல்திருத்தணி அமிர்தாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி படிக்க வைத்தார். கடந்தாண்டு தாரணிபிரியா பத்தாம் வகுப்பு படித்தார். பொதுத் தேர்வில், 500க்கு,, 421 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார்.இந்நிலையில், தாரணிபிரியா தன் குடும்ப சூழ்நிலை காரணமாக உயர்கல்வி கற்பதற்கு முடியாத நிலை ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் லோகமணி, தாரணிபிரியா மற்றும் அவரது தாயை நேரில் சந்தித்து, பெண் கல்வியின் அவசியம் எடுத்து கூறினார். மேலும், திருத்தணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 1 வகுப்பில் தாரணிபிரியாவை சேர்த்தார்.மாணவிக்கு, தேவையான பள்ளி சீருடைகள், நோட்டு புத்தகங்கள், உபகரணம் வாங்கி கொடுத்து, இந்தாண்டிற்கான படிப்பு செலவு முழுதும் ஏற்றுக் கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை