உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பிஸ்கட்டில் கஞ்சா இருவர் சிக்கினர்

பிஸ்கட்டில் கஞ்சா இருவர் சிக்கினர்

புழல்:புழல் சிறையில், ஆர்.கே.நகரைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டு உள்ளார். நேற்று முன்தினம், அதே பகுதியை சேர்ந்த ஜீனத், 40, என்பவர், அவரை பார்க்க சென்ற போது, 'பிஸ்கட்' பாக்கெட்டுகளை கொடுக்க முயன்றார். சிறை காவலர், சோதனை செய்த போது, அதில் மறைத்து வைத்திருந்த 30 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.இதே போல், குரோம்பேட்டையைச் சேர்ந்த சாலமன் என்ற கைதியை பார்க்க, தயாள் ராஜ், 25, என்பவர் வந்தார். இவர் கொண்டுவந்த, 'பிஸ்கட்' கவரை, போலீசுக்கு பயந்து கீழே போட்டு தப்பினார். அதில், 40 கிராம் கஞ்சா இருந்தது தெரிந்தது. புழல் போலீசார், இருவர் மீதும் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ