திருத்தணி: திருத்தணி அடுத்த கே.ஜி.கண்டிகையில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவிலில் நேற்று குரு பவுர்ணமி ஒட்டி அதிகாலை, 5:00 மணிக்கு சுப்ரபாரதம் நிகழ்ச்சியுடன் துவங்கியது. காலை 8:00 மணிக்கு மூலவருக்கு, 108 லிட்டர் பால் அபிேஷகம், அலங்காரம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சத்தியநாராயண பூஜையும், மதியம், 12:00 மணிக்கு மதிய ஆரத்தி நடந்தது. பின் பஜனை குழுவினரின் பக்தி பாடல்கள் பாடப்பட்டது. பக்தர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இரவு, 7:00 மணிக்கு உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தார். நிகழ்ச்சியில், திருத்தணி, கே.ஜி.கண்டிகை மற்றும் சுற்றியுள்ள பக்தர்கள் வழிப்பட்டனர். l கடம்பத்துார் ஒன்றியம் வெங்கத்துார் ஊராட்சி மணவாளநகர் பகுதியில் அமைந்துள்ளது சமர்த்த சாயிபாபா கோவில். இங்கு நேற்று குருபூர்ணிமா விழா நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு காகட ஆர்த்தியும், தொடர்ந்து 8:30 மணிக்கு பாபாவிற்கு பக்தர்கள் பால் அபிேஷகம் செய்தனர்.பின் மதியம் 12:00 மணிக்கு ஆரத்தியும் மாலை 6:30 மணிக்கு துாப் ஆரத்தியும், இரவு 7:00 மணிக்கு பல்லக்கு ஊர்வலமும் நடந்தது. இரவு 8:30 மணிக்கு சேஜ் ஆரத்தியுடன் குரு பூர்ணிமா விழா நிறைவு பெற்றது. பவுர்ணமி ருத்ராபிஷேகம்
ஆர்.கே.பேட்டை அடுத்த ராசபாளையம் கிராமத்தில் அமைந்துள்ளது பழமையான பாலகுருநாதீஸ்வரர் கோவில். இந்த கோவிலில் நித்திய பூஜை, சிவராத்திரி, பிரதோஷம் உள்ளிட்ட உற்சவங்களுடன் பவுர்ணமி ருத்ராபிஷேகம் மாதம்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. ஆடி மாத பவுர்ணமியை ஒட்டி நேற்று காலை 10:00 மணிக்கு பாலகுருநாதீஸ்வரருக்கு சிறப்பு ருத்ராபிஷேகம் நடத்தப்பட்டது. இதையொட்டி, ராசபாளையம் கிராமத்தை சேர்ந்த பக்தர்கள், புனித நீர் கலசத்தை ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வந்து யாகம் நடத்தினர்.அதைத் தொடர்ந்து, மூலவர் பாலகுருநாதீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது.இதே போல், அத்திமாஞ்சேரி பேட்டை வள்ளலார் மடத்தில், பகல் 12:00 மணிக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. திரளான பக்தர்கள் ஜோதி தரிசனம் செய்தனர்.