| ADDED : ஏப் 21, 2024 12:12 AM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில், மாநில எல்லையோர சோதனைச்சாவடி அமைந்துள்ளது. போக்குவரத்து துறை, போலீஸ், வனத்துறை, கலால் உள்ளிட்ட துறைகள் சார்பில் அங்கு வாகன தணிக்கை மற்றும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு லாரிகள் வாயிலாக மணல் கடத்தப்பட்டு வருகிறது. அப்படி மணல் கடத்தி வரும் லாரிகளை போலீசார் பறிமுதல் செய்து, சோதனைச்சாவடியில் நிறுத்தி வைக்கின்றனர். அதேபோன்று எரிசாராயம் கடத்திய வாகனங்களும் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பறிமுதல் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து தற்போது, சோதனைச்சாவடியின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ளன. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.சோதனைச்சாவடி வளாகத்தில் பறிமுதல் வாகனங்கள் நிறுத்துவதற்கு என தனி இடம் இருப்பதால், அந்த இடத்தில் பறிமுதல் வாகனங்களை நிறுத்த வேண்டும் என பிற வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.