உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நகை கடைக்காரர்களுக்கு இன்ஸ்., அட்வைஸ்

நகை கடைக்காரர்களுக்கு இன்ஸ்., அட்வைஸ்

திருத்தணி: திருத்தணி நகரில், ம.பொ.சி.சாலை, அரக்கோணம் சாலை, கடப்பா டிரங்க் ரோடு, கந்தப்பநாயக்கர் தெரு, என்.எஸ்.சி., போஸ் ரோடு மற்றும் ஜோதி சாமி ஆகிய பகுதிகளில் 70க்கும் மேற்பட்ட தங்கநகை விற்பனை மற்றும் நகை அடகு கடைகள் இயங்கி வருகின்றன. இரு நாட்களுக்கு முன் ஒரு நகை அடகு கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள், தங்கநகை, பணம் மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச் சென்றனர். போலீசார் கண்காணிப்பு கேமிராக்கள் உதவியுடன், 24 மணி நேரத்தில் அடகு கடையில் திருடியவரை கைது செய்து நகை, வெள்ளி மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.இதையடுத்து திருத்தணி போலீசார் சார்பில் நகை கடை உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில், திருத்தணி இன்ஸ்பெக்டர் மதியரசன் பங்கேற்று பேசியதாவது: நகை கடைக்காரர்கள் தங்களது கடையில் மற்றும் சாலை தெரியுமாறு கூடுதல் கண்காணிப்பு கேமிராக்கள் பொறுத்த வேண்டும். இரவு காவலர்கள் நியமிக்க வேண்டும். கடைகளின் பாதுகாப்பு உறுதி செய்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி