உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / எல்லையில் வாகன சோதனை தீவிரம்

எல்லையில் வாகன சோதனை தீவிரம்

திருவள்ளூர்:லோக்சபா தேர்தலை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் கண்காணிப்பு குழுவினர் நெடுஞ்சாலை மற்றும் மாவட்ட எல்லை உட்பட பல இடங்களில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளிலும் மூன்று குழுக்களாக 90 குழுக்கள் அமைக்கப்பட்டு வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மற்றும் தேர்தல் அலுவலர் பிரபுசங்கர் உத்தரவின்படி மூன்று ஷிப்டுகளில் போலீசார் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினருடன் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலை, திருவள்ளூர் - திருத்தணி நெடுஞ்சாலை, திருப்பாச்சூர் - கொண்டஞ்சேரி, மப்பேடு - தண்டலம் நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ