மேலும் செய்திகள்
அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
03-Sep-2024
திருவாலங்காடு:திருவாலங்காடு ரயில் நிலையம் அடுத்த பெரியக்களக்காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாசாமி மகன் சாந்தகுமார், 17.இவர் அரக்கோணம் அடுத்த புளியமங்களத்தில் உள்ள அரசு ஐ.டி.ஐ.,யில் வெல்டர் முதலாமாண்டு பயின்று வந்தார்.நேற்று ஐ.டி.ஐ.,க்கு சென்று விட்டு மாலை அரக்கோணத்தில் இருந்து புறநகர் ரயில் வாயிலாக வீடு திரும்பினார். ரயில் திருவாலங்காடு ரயில் நிலையம் அருகே வந்த போது இறங்க வேண்டிய ரயில் நிலையம் வந்துவிட்டதா என எட்டிப்பார்த்துள்ளார்.அப்போது எதிர்பாராத விதமாக ரயிலில் இருந்து தவறி தண்டவாளத்தில் விழுந்தார். இதில் சம்பவ இடத்திலேயே சாந்தகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அரக்கோணம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
03-Sep-2024