உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நகை திருடியவர் கைது

நகை திருடியவர் கைது

ஊத்துக்கோட்டை,:பெரியபாளையம் அருகே, நெய்வேலி கிராமம், வன்னியர் தெருவில் வசித்து வருபவர் நிர்மலா, 42. பால் விற்பனை செய்து வருகிறார். பீரோவில் ஒரு சவரன் கம்மல், மூன்று சிறிய கம்மல், நான்கு கொலுசு ஆகியவை வைத்து பூட்டி விட்டு, சாவியை அலமாரி யில் வைத்திருந்தார்.நேற்று முன்தினம் மாலை பீரோவை திறந்து பார்த்தபோது, நகைகள் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து நிர்மலா, பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரில் அதே பகுதியைச் சேர்ந்த மாரி,44, என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்து இருந்தார்.போலீசார், மாரியை போலீஸ் நிலையம் அழைத்து விசாரணை நடத்தினர். இதில் நிர்மலா வீட்டில் நகை திருடியதை ஒப்புக் கொண்டார். திருடிய நகைகளை போலீசிடம் ஒப்படைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ