மேலும் செய்திகள்
கார் மோதி வடமாநில வாலிபர் பலி
07-Mar-2025
திருவாலங்காடு:கடம்பத்தூர் ஒன்றியம், மப்பேடு சமத்துவபுரம் பகுதியில், கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் திருத்தணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் வேலை செய்து வருகின்றனர்.தினமும் தொழிற்சாலைக்கு சொந்தமான பேருந்தில் வேலைக்கு சென்று வருகின்றனர். நேற்று மதியம் பணி முடித்த திருத்தணி பகுதி ஊழியர்கள், தொழிற்சாலை பேருந்தில், சென்னை -- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வழியாக திருத்தணி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.ஆர்.கே.பேட்டை, ராமசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த அருண், 38, என்பவர் பேருந்தை ஓட்டினார். கனகம்மாசத்திரம் அடுத்த ஆற்காடுகுப்பம் அருகே சென்றபோது, திருத்தணியில் இருந்து திருவள்ளுர் நோக்கி வந்த லாரி, பேருந்து மீது மோதியது.இதில், ஓட்டுனர் மற்றும் பேருந்தில் இருந்த புச்சிரெட்டிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த 12 தொழிலாளர்கள் காயமடைந்தனர். மேலும், லாரி டிரைவர் வெங்கடேசன் என்பவரும் படுகாயமடைந்தார்.தகவலறிந்து வந்த கனகம்மாசத்திரம் போலீசார், 14 பேரையும் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரிக்கின்றனர்.
07-Mar-2025