மேலும் செய்திகள்
ரூ.94.50 லட்சம் மோசடி: ஆதம்பாக்கம் நபர் கைது
19-Aug-2024
ஆவடி:கூடுவாஞ்சேரி, இந்திரா காந்தி நகரைச் சேர்ந்தவர் பொன்சிங்கம், 61. இவர், தலைமைச் செயலகத்தில் வேலை பார்ப்பதாகக் கூறி, பலரை நம்ப வைத்துள்ளார்.அவர்களிடம், படப்பை அருகே, பணப்பாக்கத்தில் உள்ள நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் வீடு வாங்கி தருவதாக கூறி, பணம் பெற்று வந்துள்ளார்.கடந்த, 2013 முதல் 2018ம் ஆண்டு வரை, ராமாபுரம், அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கவுதமன், 35, உட்பட 104 பேரிடம், தலா 85,000 ரூபாய் வீதம், 88 லட்சம் ரூபாய் வாங்கினார்.அதேபோல், 2016ல், பழைய வண்ணாரப்பேட்டையில் 60 பேரிடம் 24 லட்சம் ரூபாய்; 2018ல் அயப்பாக்கத்தில் 350 பேரிடம் 38.50 லட்சம் ரூபாய் ஏமாற்றியுள்ளார். வீட்டு ஆணையை போலியாக தந்து, 1.50 கோடி ரூபாய் வரை மோசடியாக பெற்றுள்ளார்.இது குறித்து, 2018ல் ஆவடி மத்திய குற்றப்பிரிவில், கவுதமன் புகார் அளித்தார். விசாரித்து வந்த தனிப்படை போலீசார், பல ஆண்டு களாக தலைமறைவாக இருந்த பொன்சிங்கத்தை, சென்னையில் நேற்று கைது செய்தனர்.
19-Aug-2024