உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மாயமானவர் சடலமாக மீட்பு

மாயமானவர் சடலமாக மீட்பு

புல்லரம்பாக்கம்:திருவள்ளூர் அடுத்த வள்ளுவர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜி, 42. சாலையோரம் கிடக்கும் பழைய பொருட்களை சேகரித்து விற்பனை செய்து வந்தார். இவருக்கு பவித்ரா, 36, என்ற மனைவியும், இரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர்.குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர், கடந்த 5ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர், பின் திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், நேற்று முன்தினம் புல்லரம்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றார். அப்போது, 'ஈக்காடு அருகே சாலையோரம் உயிரிழந்த ஒருவரை, திருவள்ளூர் பிணவறையில் வைத்துள்ளோம்' என, போலீசார் தெரிவித்தனர். அங்கு சென்று பார்த்த போது, ராஜி என தெரியவந்தது. இதுகுறித்து பவித்ரா அளித்த புகாரின்படி, புல்லரம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை