உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நெடுஞ்சாலையோரம் அரிப்பு அச்சத்தில் வாகன ஓட்டிகள்

நெடுஞ்சாலையோரம் அரிப்பு அச்சத்தில் வாகன ஓட்டிகள்

கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டை - சத்தியவேடு சாலையில், கவரைப்பேட்டை முதல் பொம்மாஜிகுளம் வரையிலான சாலை, தமிழக நெடுஞ்சாலை துறையினர் பராமரிப்பில் உள்ள சாலையாகும்.இரு வழிச்சாலையாக இருந்ததை இரண்டு ஆண்டுகளுக்கு முன் நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டது.அந்த சாலையில், குருத்தானமேடு கிராம பகுதியில், சாலையோரம் தேங்கிய மழைநீரால், சாலை அரிப்பு ஏற்பட்டது. இதனால், சத்தியவேடு நோக்கி செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். குறிப்பாக இரவு நேரத்தில் பயணிக்கு இருசக்கர வாகன ஓட்டிகள், விபத்து அபாயத்தில் செல்ல வேண்டியுள்ளது. வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதி, நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக அந்த சாலை அரிப்பை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி