மேலும் செய்திகள்
மழைநீருடன் கழிவுநீர் தேக்கம் கலெக்டர் உத்தரவு என்னாச்சு?
21 hour(s) ago
பல்லாங்குழியான சாலை வாகன ஓட்டிகள் அவதி
21 hour(s) ago
மதுபோதையில் அலப்பறை போக்குவரத்து பாதிப்பு
22 hour(s) ago
சென்னை, சென்னை புறநகரில் கூடுதல் பேருந்துகளை இயக்க, 100 புதிய வழித்தடங்களின் பட்டியலை மாநகர போக்குவரத்து கழகம் தேர்வு செய்துள்ளது. இந்த வழித்தடங்களில் 350 பேருந்துகள் வரை இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் இயக்கப்படும், 3,000க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகளில் தினமும் 33 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர்.சென்னையின் எல்லை பகுதி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், செங்கல்பட்டு, மாமல்லபுரம், திருவள்ளூர் என புறநகர் பகுதிகளுக்கும், மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலைய முனையம் திறக்கப்பட்டுள்ளதால், மாநகர பேருந்துகளின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால், போதிய மாநகர பேருந்துகள் இயக்குவதில்லை என, பயணியர் புகார் தெரிவித்து வருகின்றனர்.இதற்கிடையே, சென்னை புறநகர் பகுதியில் புது வழித்தடங்களில் பேருந்துகள், சிற்றுந்துகள் இயக்க வேண்டும் என, பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை மனுக்களை அளித்து வருகின்றனர்.இந்த மனுக்கள் மீது, உண்மையாகவே பேருந்து தேவை இருக்கிறதா? என்பது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள், ஆறு மாதங்களாக நேரில் சென்று ஆய்வு நடத்தி உள்ளனர். அதன்படி, பயணியர் தேவை அதிகமாக உள்ள 100 புதிய வழித்தடங்களை, அதிகாரிகள் தேர்வு செய்துள்ளனர்.இது குறித்து, மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:சென்னை, புறநகர் பகுதிகளில் குடியிருப்புகள், தொழிற்சாலைகள், அலுவலகங்கள் அதிகரித்து வருவதால், பேருந்துகளின் தேவை அதிகமாக இருக்கிறது.குறிப்பாக, கிளாம்பாக்கம் புது பேருந்து முனையத்தில் இருந்து கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என, பயணியர் மற்றும் நலச்சங்கங்கள் சார்பில், கூடுதல் பேருந்து சேவை கேட்டு மனுக்களை அளித்து வருகின்றனர்.ஆவடி, மீஞ்சூர், மாதவரம், செங்குன்றம், வண்டலுார், பெரும்பாக்கம், சோழிங்கநல்லுார், குன்றத்துார், கோவூர், திருப்போரூர், கூடுவாஞ்சேரி, கொளத்துார் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் வகையில், 100 புதிய வழித்தடங்களை தேர்வு செய்து, பட்டியலை நிர்வாகத்திடம் அளித்துள்ளனர்.இந்த பட்டியலை கொண்டு, படிப்படியாக புதிய வழித்தடங்களில் பேருந்துகளை இயக்குவோம். அடுத்த இரண்டு மாதங்களில் 352 புதிய பேருந்துகளை மாநகர போக்குவரத்து கழகத்தில் இணைத்து இயக்கும்போது, புதிய வழித்தடங்களில் பயணியருக்கு உதவியாக இருக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
21 hour(s) ago
21 hour(s) ago
22 hour(s) ago