உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நந்தியம்பாக்கம் ரயில்வே மேம்பாலம் இணைப்பு சாலை பணி துவக்கம்

நந்தியம்பாக்கம் ரயில்வே மேம்பாலம் இணைப்பு சாலை பணி துவக்கம்

மீஞ்சூர்:சென்னை -சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில், அத்திப்பட்டு - நந்தியம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே, எல்.சி.,14 ரயில்வே கேட் உள்ளது.இந்த ரயில்வே கேட் வழியாக, நந்தியம்பாக்கம், கொள்ளடீ, தமிழ்கொரஞ்சூர், மவுத்தம்பேடு, செப்பாக்கம், கொரஞ்சூர் ரெட்டிப்பாளையம் உள்ளிட்ட, 20 கிராமங்களை சேர்ந்தவர்கள் சென்று வருகின்றனர்.கிராம வாசிகளின் நீண்டகால கோரிக்கை தொடர்ந்து, கடந்த, 2018ல், சென்னை பெருநகர வளர்ச்சி திட்டத்தின் ரயில்வே பாலம் அமைக்கப்பட்டது.நந்தியம்பாக்கம் ரயில் நிலையம் அருகே, ரயில்வே எல்லையில் துாண்கள் அமைத்து அதன் மீது ஓடுபாதை கட்டி முடிக்கப்பட்டது.பாலப்பணிகள் முடிந்து, இருபுறமும் இணைப்பு சாலை அமைப்பதில் இழுபறி நீடித்து வந்தது.மேற்கண்ட பாலத்தின் இணைப்பு சாலைக்காக, இருபுறமும் வீடு, கடை மற்றும் காலி நிலம் என, 7,433 சதுர மீட்டர் நிலம் கையப்படுத்தப்பட்டது.இழப்பீடு பணம் வழங்குவதில் நீடித்து வந்த இழுபறிக்கு முடிவு எட்டப்பட்ட நிலையில், 44.50 கோடி ரூபாயில் இணைப்பு சாலை அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை நேற்று நடந்தது.பொன்னேரி காங்.,- எம்.எல்.ஏ., துரைசந்திரசேகர், கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ., டி.ஜெ.கோவிந்தராஜன் ஆகியோர், பணிகளை துவக்கி வைத்தனர்.இணைப்பு சாலை பணிகள் துரிதமாக மேற்கொண்டும், மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ