உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மாம்பூக்களை தாக்கும் தத்து பூச்சிகள் மருந்து அடிக்கும் பணிகள் மும்மரம்

மாம்பூக்களை தாக்கும் தத்து பூச்சிகள் மருந்து அடிக்கும் பணிகள் மும்மரம்

கும்மிடிப்பூண்டி, மாம்பழ மகசூலை பாதிக்கும் வகையில், மாம்பூக்களை தாக்கும் தத்து பூச்சிகளை அழிப்பதற்காக, மாமரங்களில் பூச்சி மருந்து அடிக்கும் பணிகளை சாகுபடியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஆரம்பாக்கம், பூவலை, கண்ணம்பாக்கம், தோக்கமூர் உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட கிராமங்களில், ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மாந்தோப்புகள் உள்ளன. அங்கு விளையும், பங்கனபள்ளி மற்றும் ஜவ்வாரி வகை மாம்பழங்களுக்கு, இந்தியா மாட்டுமின்றி வெளிநாடுகளிலும் மவுசு அதிகம். குறிப்பாக அரபு மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.ஒவ்வொரு ஆண்டும், பிப்ரவரி முதல் மார்ச் மாதங்களில் மாமரங்களில் பூங்கொத்துகள் உண்டாகும். நடப்பு சாகுபடியில், பூங்கொத்துக்கள் அதிக அளவில் காணபட்டன. ஆனால், பல இடங்களில் மாம்பூக்களில் தத்து பூச்சி தாக்கம் அதிகரித்து பூக்கள் கருகி சுருண்டு காணப்படுகிறது.இதே நிலை தொடர்ந்தால் மாம்பழ விளைச்சல் கடுமையாக பாதிக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு தீர்வு காணும் விதமாக, மாமரங்களுக்கு பூச்சி மருந்து அடிக்கும் பணிகளை பாதிக்கப்பட்ட சாகுபடியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.மகரந்த சேர்க்கைக்கு உதவிடும் பூச்சிகளை பாதிக்காமல், மாம்பூக்களில் உள்ள தத்து பூச்சுகள் மட்டும் அழிக்க, குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் தண்ணீரில் பூச்சி மருந்து கலந்து அடிக்க வேண்டும் என தோட்டக்கலை துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.அதன்படி கும்மிடிப்பூண்டி பகுதி மாம்பழ சாகுபடியாளர்கள், தண்ணீரில் பூச்சி மருந்து கலந்து, அதை ஒவ்வொரு மரமாக பீச்சு அடித்து வருகின்றனர். அதன் வாயிலாக, மாம்பழ மகசூல் பாதிக்காமல் இருக்கும் என சாகுபடியாளர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ