| ADDED : ஜூன் 14, 2024 01:22 AM
திருவள்ளூர்:திருவள்ளூர் பேருந்து நிலையத்தில், பயணியர் அமரும் நடைமேடை அருகில், கடிகாரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கடிகாரம் முறையாக பராமரிப்பின்றி உள்ளது. நேற்று மாலை 4:30 மணியளவில் புகைப்படம் எடுக்கப்பட்டபோது, கடிகாரத்தில், 2:50 என காட்டியது.இதனால், குறித்த நேரத்தில் பேருந்து வரும் என எதிர்பார்த்து காத்திருக்கும் பயணியர், கடிகாரத்தில் தவறான நேரம் காட்டுவதால், தாங்கள் எதிர்பார்க்கும் பேருந்தினை தவறவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, நகராட்சி நிர்வாகம் கடிகாரத்தை முறையாக பராமரித்து, சரியான நேரம் காட்டும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வேண்டுகோள் விடுத்துஉள்ளனர்.