மேலும் செய்திகள்
சாலையில் மண் குவியல் வாகன ஓட்டிகள் அச்சம்
19-Feb-2025
ஊத்துக்கோட்டை, ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் நாகலாபுரம் சாலைஉள்ளது. சென்னையில் இருந்து ஆந்திர மாநிலம் செல்லும் வாகனங்கள், நாகலாபுரம் சாலை வழியே பயணிக்கின்றன. போக்குவரத்து நிறைந்த இச்சாலையில் வீடுகள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றில் இருந்து கழிவுநீர் செல்ல திறந்தவெளி கால்வாய் அமைக்கப்பட்டது.இந்த கால்வாயில் அருகே உள்ள -குடியிருப்பு வாசிகள் குப்பை கழிவுகளை கொட்டியதால், கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கியது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயம் இருந்து வந்தது. இந்நிலையில், பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கால்வாயில் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது, கால்வாயில் இருந்த குப்பை கழிவு மற்றும் மண் சாலையோரம் கொட்டப்பட்டது. இதனால், இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், சாலையோரம் குவிக்கப்பட்டுள்ள குப்பை மற்றும் மண் குவியல்களில் சிக்கி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, நாகலாபுரம் சாலையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பை மற்றும் மண் குவியல்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
19-Feb-2025