உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஆண்டார்குப்பம் கோவிலில் விரைவில் பார்க்கிங் வசதி

ஆண்டார்குப்பம் கோவிலில் விரைவில் பார்க்கிங் வசதி

பொன்னேரி, பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பம் பகுதியில், பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. சித்திரை கிருத்திகை, பிரம்மோற்சவம், செவ்வாய்கிழமைகளில், கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.முகூர்த்த நாட்களில், ஏராளமான திருமண நாட்களில் நடைபெறுவதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது பக்தர்கள், திருமண நிகழ்வுகளுக்கு வருபவர்கள் கொண்டு வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய இடவசதியில்லாத நிலையில், பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். விசேஷ நாட்களில் ஒரு கி.மீ., தொலைவிற்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. கோவிலை சுற்றியுள்ள குடியிருப்புகளின் வாயிலின் குறுக்கே வாகனங்கள் நிறுத்தப்படுவதால், குடியிருப்புவாசிகளும் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். கோவிலுக்கு ஏராளமான நிலங்கள் இருப்பதால், வாகன நிறுத்துமிடம் அமைக்க வேண்டும் என பக்தர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து பொன்னேரி காங்., - எம்.எல்.ஏ., துரைசந்திரசேகரிடமும் தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து நேற்று, எம்.எல்.ஏ., ஆண்டார்குப்பத்தில் ஆய்வு மேற்கொண்டார். கோவில் அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தார். பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'கோவிலுக்கு சொந்தமான இடங்களில் வாகன நிறுத்துமிடம் அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். விசேஷநாட்களில், பக்தர்களுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தி தரப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை