மேலும் செய்திகள்
காஞ்சி வரதர் கோவிலில் திருப்பவித்ர உற்சவம்
18-Aug-2024
சோளிங்கர்:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்தில் அமைந்துள்ளது யோக நரசிம்ம சுவாமி மலைக்கோவில். யோக நரசிம்மரின் உற்சவமூர்த்தியான பக்தோசித பெருமாள், சோளிங்கர் நகரில் அருள்பாலித்து வருகிறார்.பக்தோசித பெருமாள் கோவிலின் பவித்ர உற்சவம் கடந்த 2ம் தேதி துவங்கியது. இதையொட்டி, ஊர்க்கோவிலில் இருந்து பக்தோசித பெருமாள், மலைக்கோவிலுக்கு எழுந்தருளினார். தொடர்ந்து ஆறு நாட்களாக நடந்து வரும் உற்சவத்தில் பெருமாளுக்கு, தினசரி திவ்ய பிரபந்த வேத இதிகாச பூரணாதியும் நடந்து வருகிறது.நேற்று காலை நடந்த உற்சவத்தை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தோசித பெருமாள் அருள்பாலித்தார். இன்று பவித்ர உற்சவம் நிறைவு பெறுகிறது.
18-Aug-2024