உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணி கோவிலில் குவிந்த பக்தர்கள் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி

திருத்தணி கோவிலில் குவிந்த பக்தர்கள் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். இந்நிலையில், நேற்று ஞாயிறு வார விடுமுறை மற்றும் ஆவணி மாத கடைசி திருமண முகூர்த்தம் என்பதால் வழக்கத்திற்கு மாறாக முருகன் கோவிலில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர்.அதாவது நேற்று முருகன் மலைக்கோவிலில் மட்டும், 60 திருமணங்களும், திருத்தணி நகரத்தில் உள்ள தனியார் மண்டபங்களில், 90 திருமணங்களும் என மொத்தம், 150 திருமணங்கள் நடந்தன. திருமணத்திற்கு வந்த நண்பர்கள் உறவினர்கள், புதுமண தம்பதிகள் மற்றும் வழக்கமாக பக்தர்கள் என மலைக்கோவிலில் குவிந்தனர்.இதனால் பொது வழியில், 4 மணி நேரமும் 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள், 2 மணி நேரமும் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். பெரும்பாலான பக்தர்கள் கார், வேன் மற்றும் இரு சக்கர வாகனங்களில் மலைக்கோவிலுக்கு சென்றதால் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.மலைப்பாதை தொடர்ந்து, மலைக்கோவில் நுழைவு வாயில்,திருத்தணி—அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையிலும் ஒரு கிலோ மீட்டர் துாரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால்திருத்தணி டி.எஸ்.பி., கந்தன், இன்ஸ்பெக்டர் மதியரசன் தலைமையில், 75க்கும் மேற்பட்ட போலீசார் மேற்கண்ட இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஒரளவுக்கு கட்டுபடுத்தினர்.நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மூலவருக்கு அதிகாலை, 5:00 மணிக்கும், மாலை, 5:00 மணிக்கும் சிறப்பு அபிேஷகம், தங்ககீரிடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி