உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மேல்நிலை குடிநீர் தொட்டி கட்ட கார்த்திகேயபுரத்தில் எதிர்ப்பு

மேல்நிலை குடிநீர் தொட்டி கட்ட கார்த்திகேயபுரத்தில் எதிர்ப்பு

திருத்தணி:திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியில் செல்லும் கொசஸ்தலை ஆற்றில் இருந்து, திருத்தணி ஒன்றியம் கார்த்திகேயபுரம் ஊராட்சிக்கு குடிநீர் வழங்குவதற்காக, 36 கோடி ரூபாய் மதிப்பில் குடிநீர் வடிகால் வாரியம் கூட்டுக்குடிநீர் திட்டப் பணி கடந்தாண்டு முதல் நடந்து வருகிறது. இதற்காக, பள்ளிப்பட்டு பகுதியில் இருந்து, 45 கி.மீட்டர் துாரத்திற்கு குடிநீர் குழாய் புதைக்கப்பட்டு வருகிறது.கார்த்திகேயபுரம் ஊராட்சி, வள்ளியம்மாபுரம் பகுதியில் சுடுகாடு அருகே, குடிநீர் மேல்நிலைத் தொட்டி கட்டுவதற்கு குடிநீர் வாரிய அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்ட நேற்று காலை முயன்றனர். தகவல் அறிந்ததும், கார்த்திகேயபுரம் மற்றும் வள்ளியம்மாபுரம் பொதுமக்கள், 50க்கும் மேற்பட்டோர், குடிநீர் தொட்டி இங்கு கட்டக்கூடாது. ஏற்கனவே இந்த இடம் ஓய்வு பெற்ற வருவாய் துறை ஊழியர்களுக்கும், எங்களுக்கும் இடையே வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. ஆகையால் குடிநீர் தொட்டி கட்டுவதை கைவிட வேண்டும் என, பொக்லைன் இயந்திரத்தை சிறைப்பிடித்து போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்ததும் திருத்தணி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சமரசம் செய்தனர். தற்காலிகமாக குடிநீர் தொட்டி கட்டும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை