உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பயணியருக்கு இடையூறாக உள்ள நடைமேடை பெயர் பலகை அகற்றம்

பயணியருக்கு இடையூறாக உள்ள நடைமேடை பெயர் பலகை அகற்றம்

திருவாலங்காடு:சென்னை -- அரக்கோணம் ரயில் மார்க்கத்தில் திருவள்ளூர் அடுத்து அமைந்துள்ளது திருவாலங்காடு ரயில் நிலையம். இந்த ரயில் நிலையம் வழியாக தினமும், 270 புறநகர் ரயில்கள் சென்னை சென்ட்ரல், கடற்கரை, அரக்கோணம், வேளச்சேரிக்கு சென்று வருகின்றன.திருவாலங்காடு ரயில் நிலையத்தில் இருந்து தினமும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணியர் சென்னைக்கு சென்று வருகின்றனர்.இந்நிலையில் திருவாலங்காடு ஒன்றாவது நடைமேடையில் கேட் அருகே இரண்டு நடைமேடை பெயர் பலகை அமைக்கப்பட்டுள்ளது.அதில் ஒன்று பயணியருக்கு இடையூறாக நடைமேடை நடுவே உள்ளது. இதனால் பயணியர் வழிப்பலகை நடுவே இருப்பதை அறியாமல் மோதி காயமடைகின்றனர். சிலர் இடித்துக்கொள்ளமால் இருக்க நடைமேடை அபாய கோட்டிற்குள் நடந்து செல்கின்றனர்.இந்நிலையில் பயணியருக்கு இடையூறாக நடைமேடைக்கு நடுவே இருக்கும் பெயர் பலகையை அகற்ற வேண்டும் என நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதை அடுத்து பெயர் பலகை அகற்றும் பணி நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை