உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பால் ஊட்டும் அறை கட்ட கோரிக்கை

பால் ஊட்டும் அறை கட்ட கோரிக்கை

திருவள்ளூர்: திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள் பால் ஊட்டு அறை இல்லாததால், சிரமப்படுகின்றனர்.திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்படுகிறது. மனு அளிக்க, ஏராளமான பெண்கள், கை குழந்தைகளுடன் வருகின்றனர். மேலும், சமூக நலத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களுக்கும், பெண்கள் அதிகளவில் வருகின்றனர்.இவ்வாறு வரும் பெண்கள், தங்கள் குழந்தைகளுக்கு பால் ஊட்ட தனி அறையில்லாததால், சிரமப்படுகின்றனர்.திறந்தவெளியில் சிரமத்துடன் குழந்தைகளுக்கு பால் ஊட்டி வருகின்றனர். அதிக மக்கள் கூடும் இடங்களான, ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் தற்போது பாலுாட்டும் அறைகள் செயல்பட்டு வருகின்றன.அதே போல், திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்திலும், குழந்தைகளுக்கு பால் ஊட்டும் அறை கட்டித் தரவேண்டும் என, பெண்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை