உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தர்பூசணி பயிரிடுவதற்கு இடுபொருள் வழங்க கோரிக்கை

தர்பூசணி பயிரிடுவதற்கு இடுபொருள் வழங்க கோரிக்கை

பொன்னேரி, பிப். 25-பொன்னேரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கோடைக்கால பயிரான தர்பூசணி பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும், 4,000 - 6,000 ஏக்கர் பரப்பளவில் தர்பூசணி பயிரிடப்படுகிறது.தற்போது அதற்கான பணிகள் துவங்கி உள்ள நிலையில், தேவையான விதை, பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்டவைகளை வழங்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.இது குறித்து தர்பூசணி பயிரிடும் விவசாயிகள் கூறியதாவது:தோட்டக்கலைத் துறை வாயிலாக, ஒரு ஏக்கருக்கு, 320 கிராம் விதைகள் வழங்கப்படுகின்றன. அவற்றின் தரமும் சரியில்லை. வெளிசந்தையில் விற்பனை செய்யப்படும் விதைகள் தரமாக இருக்கின்றது. வேறு வழியின்றி விவசாயிகள் அதை, அதிக விலை கொடுத்து வாங்கும் நிலை உள்ளது.பொன்னேரியை சுற்றியுள்ள பகுதிகளில், தர்பூசணி பயிர் ஓரளவிற்கு வருவாய் தரக்கூடியதாக இருக்கிறது. தோட்டக்கலைத் துறை வாயிலாக தர்பூசணி பயிரிடுவதற்கு தேவையான தரமான விதைகள், மருந்தினங்கள், சொட்டுநீர் பாசனத்திற்கான உபகரணங்கள் உள்ளிட்டவைகளை வழங்கினால், அதிகளவில் விவசாயிகள் இதை பயிரிட்டு பயன் பெறுவர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை