உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அரசு பள்ளி சுற்றுச்சுவர் சேதம் சீரமைக்க கோரிக்கை

அரசு பள்ளி சுற்றுச்சுவர் சேதம் சீரமைக்க கோரிக்கை

திருத்தணி:திருத்தணி நகராட்சி பெரியார் நகரில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்தில், தமிழக முதல்வரின் காலை சிற்றுண்டி தயாரிக்கும் மையமும் உள்ளது. இந்த மையத்தில் இருந்து திருத்தணி நகரம் மற்றும் ஒன்றியத்திற்கு வேன் மூலம் காலை சிற்றுண்டி அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் பள்ளியின் பள்ளியின் நுழைவு வாயில் அருகே சுற்றுசுவர் சேதம் அடைந்துள்ளதால், இரவு நேரம் மற்றும் பள்ளி விடுமுறை நாட்களில், சில இளைஞர்கள் புகுந்து, பள்ளி வளாகத்தில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இரவு நேரத்தில் பள்ளி வளாகத்தில் குடிமகன்கள் புகுந்து மதுபாட்டில்களை அங்கேயே போட்டு செல்வதால் மறு நாள் பள்ளிக்கு வரும் மாணவர்கள் முகம் சுளிக்கின்றனர்.எனவே பழுதடைந்த சுற்றுசுவரை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை