உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நயப்பாக்கத்தில் அடிப்படை வசதி இல்லாமல் பகுதிவாசிகள் அவதி

நயப்பாக்கத்தில் அடிப்படை வசதி இல்லாமல் பகுதிவாசிகள் அவதி

நயப்பாக்கம்,:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது புதுவள்ளூர் ஊராட்சிக்குட்பட்ட நயப்பாக்கம் கிராமம். இங்குள்ள மூன்று வார்டுகளில் 400க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் மிகவும் பாதிக்கப்பட்டதால் இங்கு அமைக்கப்பட்டு மூன்று மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் தண்ணீர் இல்லை. இதனால் பகுதிவாசிகள் கடந்த மூன்று ஆண்டுகளாக அவதிப்பட்டு வருகின்றனர். இப்பகுதியில் உள்ள நெடுஞ்சாலை மிகவும் சேமதடைந்து மண்சாலையாயாக மாறி மோசமான நிலையில் உள்ளதால் நடந்து கூட செல்ல முடியாமல் பகுதிவாசிகள் மற்றும் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். அவசர மருத்துவ தேவைக்கு ஆம்புலன்ஸ் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் சில நேரங்களில் இப்பகுதி வழியாக பூந்தமல்லி மற்றும் திருவள்ளூரிலிருந்து இயக்கப்படும் அரசு பேருந்துகள் 17 ஜி மற்றும் 160 பி ஆகிய இருந்துகளும் முறையாக இயக்கப்படாததால் பகுதிவாசிகள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ, மாணவியரும் சிரமப்பட்டு வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் நயப்பாக்கம் பகுதியில் ஆய்வு செய்து சாலை, குடிநீர், கழிவுநீர் கால்வாய், அரசு பஸ் இயக்கம் போன்ற அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டுமென பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !