உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வேளாண் கிடங்கு அருகே குப்பை திருத்தணியில் நோய் அபாயம்

வேளாண் கிடங்கு அருகே குப்பை திருத்தணியில் நோய் அபாயம்

திருத்தணி: திருத்தணி அடுத்த கே.ஜி.கண்டிகையில், கூடுதல் வேளாண் கிடங்கு கட்டடம் உள்ளது. இந்த வளாகத்தில் நெல்கொள் முதல் நிலையம், சமுதாய கூடம், நுாலகம் மற்றும் வாரச்சந்தையும் இயங்கி வருகிறது. இந்த நிலையில், வேளாண் கிடங்கு அருகே ஊராட்சி துாய்மை பணியாளர்கள் குப்பையை கொட்டி வருகின்றனர். இந்த குப்பையில் உரம் தயாரிக்காமல், நாளுக்கு நாள் குப்பை குவியல் அதிகரித்து வருகிறது. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது.குப்பையை அகற்ற வேண்டும் என வேளாண் துறை அலுவலர்கள், வாரச்சந்தை வியாபாரிகள் மற்றும் ஊராட்சி நுாலக வாசகர்கள் பல மாதங்களாக புகார் தெரிவித்தும் ஊராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், அலட்சியம் காட்டி வருகின்றனர்.துாய்மை பணியாளர்களிடம் வேளாண் கிடங்கு பகுதியில் குப்பை கொட்டக்கூடாது என அறிவுறுத்தியும், தொடர்ந்து குப்பை கொட்டுகின்றனர். எனவே மாவட்ட கலெக்டர் கே.ஜி.கண்டிகை பொதுமக்கள், வேளாண் அலுவலர்கள் நலன் கருதி, குப்பை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துஉள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை