உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கும்மிடியில் தொடர் கொள்ளை மூவர் கைது: 30 சவரன் மீட்பு

கும்மிடியில் தொடர் கொள்ளை மூவர் கைது: 30 சவரன் மீட்பு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே சேகண்யம், குருவிஅகரம், பட்டுப்பள்ளி ஆகிய மூன்று கிராமங்களில், வீடுகளின் பூட்டை உடைத்து பணம், நகை திருடு போனது. இந்த சம்பவங்கள் குறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் தனித்தனியே வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், மேற்கண்ட கிராம பகுதிகளில் திருட்டில் ஈடுபட்ட, பொன்னேரி அடுத்த வேலுார் கிராமத்தை சேர்ந்த லெனின், 39, நாகராஜ், 36, தேவம்பட்டு கிராமத்தை சேர்ந்த சிவா, 36, ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம், 30 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ