மேலும் செய்திகள்
கோனேட்டம்பேட்டையில் பள்ளி எதிரே விபத்து அபாயம்
13-Aug-2024
ஆர்.கே.பேட்டை:ஆர்கே பேட்டை ஒன்றியத்தின் மேற்கு எல்லையில், ஆந்திர மாநில எல்லையை ஒட்டி அமைந்துள்ள மலை கிராமம் நேசனூர். இந்த கிராமத்திற்கு பேருந்து வசதி கிடையாது. கிராமத்தின் தெற்கு பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. தெருவை ஒட்டி சாலை திருப்பத்தில் அமைந்துள்ள இந்த பள்ளிக்கு, சுற்றுச்சுவரும் கிடையாது. இந்தப் பள்ளியில், 60 மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளியின் முன் பகுதியில் தெருவை ஒட்டியே இறைவணக்க கூடம் அமைந்துள்ளது. பள்ளி வளாகத்தை ஒட்டி, தெருவில் கழிவு நீர் குட்டையாக தேங்கி நிற்கிறது. சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் நிலை உள்ளது. அதனால் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர் பேருந்து வசதி இல்லாத இந்த கிராமத்திற்கு கல்வி அதிகாரிகள் வருகிறார்களா இல்லையா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. பள்ளி எதிரே தேங்கும் கழிவு நீரை அகற்றி பள்ளி வளாகத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
13-Aug-2024