மேலும் செய்திகள்
அடையாளம் தெரியாத வாகனம் மோதி 4 எருமைகள் பலி
27-Aug-2024
பழவேற்காடு:பழவேற்காடு அடுத்த ஜமீலாபாத் கிராமத்தை சேர்ந்தவர் யூனிஸ், 32 இவர் மாடு வளர்ப்பு தொழில் செய்து வருகிறார். தினமும் மாடுகள் பழவேற்காடு அருகில் உள்ள கடப்பாக்கம், அபிராமபுரம் கிராமங்களில் மேய்ச்சலுக்கு சென்று வரும்.கடந்த, 4ம் தேதி காலை மேய்ச்சலுக்கு சென்ற, நான்கு எருமை மாடுகள் மாலையில் வீடு திரும்பாத நிலையில் யூனிஸ், தேடி வந்தார்நேற்று காலை, அபிராமபுரம் பகுதியில் உள்ள கழிமுகப்பகுதியில் மாடுகள் இறந்து கிடந்தது.பலத்த காற்று மழையில், மின்ஒயர் அறுந்து அதில், மாடுகள் சிக்கி இறந்தது தெரிந்தது.தகவல் அறிந்த மின்வாரியத்தினர் அங்கு சென்று மின்இணைப்பை துண்டித்து, சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். அதேபோன்று, ஜமீலாபாத் கிராமத்தை சேர்ந்த சையது ஜமால், 40, என்பவரது இரண்டு எருமை மாடுகளும் மேய்ச்சலுக்கு சென்றபோது, பாக்கம் கிராமத்தில் அறுந்து கிடந்த மின்ஒயரில் சிக்கி இறந்தனர். காட்டூர் மற்றும் திருப்பாலைவனம் போலீசார் விசாரிக்கின்றனர்.
27-Aug-2024