உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பழங்குடியினருக்கு சிறப்பு முகாம்

பழங்குடியினருக்கு சிறப்பு முகாம்

திருவாலங்காடு திருவாலங்காடு ஒன்றியம், வேணுகோபாலபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது பரேஸ்புரம் கிராமம். இந்த கிராமத்தில், 40க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த இருளர் பழங்குடி மக்கள் வசிக்கின்றனர்.இவர்களுக்கு பிரதமர் ஜன்மன் திட்டத்தின் கீழ் அடிப்படை ஆவணங்கள் பதிவு செய்யும் சிறப்பு முகாம் நேற்று பரேஸ்புரத்தில் உள்ள இ - சேவை மையத்தில் நடந்தது. திருவாலங்காடு வருவாய் ஆய்வாளர் ராஜசேகர், ஊராட்சி தலைவர் மதுரைய்யா ஆகியோர் இருளர் மக்களுக்கு தேவையான புதிய ஆதார் அட்டை, சாதி சான்றிதழ், உழவர் அடையாள அட்டை, மருத்துவ காப்பீடு அட்டை , புதிய வங்கி கணக்கு துவங்குதல் உள்ளிட்ட மனுக்களை பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி