| ADDED : மார் 25, 2024 06:12 AM
கடம்பத்துார்: திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட மேல்நல்லாத்துார் ஊராட்சி.இப்பகுதியில் உள்ள நெடுஞ்சாலையோரம் ஊராட்சி மன்ற அலுவலகம், அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இந்த நெடுஞ்சாலை வழியே அரசு, தனியார், பள்ளி, கல்லுாரி, தொழிற்சாலை பேருந்து, கனரக, இலகுரக வாகனம் என, தினமும் 10,000த்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.இந்த நெடுஞ்சாலையில் வேகத்தடை இல்லாததால் அரசு பள்ளிக்கு வரும் மாணவ - மாணவியர் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டுமென, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து நெடுஞ்சாலைத்துறையினர் அரசு பள்ளி அருகே வேகத்தடை அமைத்துள்ளனர்.