உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மரத்தில் கார் மோதி வாலிபர் உயிரிழப்பு

மரத்தில் கார் மோதி வாலிபர் உயிரிழப்பு

கும்மிடிப்பூண்டி:சென்னை, தொண்டையார்பேட்டை பகுதியில் வசித்தவர் ஆரோக்கியசாமி மகன் நெல்சன், 24. இவர், நேற்று முன்தினம் நண்பர்களான ஜான், லோகேஷ், ராஜ்குமார், புருஷோத்தமன் ஆகியோருடன், ஆந்திர மாநிலம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். காரை நெல்சன் ஓட்டினார்.சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த அரும்பாக்கம் அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர மரத்தில் மோதி தலைகீழாக கவிழ்ந்தது. சம்பவ இடத்திலேயே நெல்சன் உயிரிழந்தார். உடன் பயணித்தவர்கள், லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். ஆரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி