உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தொழிற்சாலை பாய்லரில் தவறி விழுந்த வாலிபர் பலி

தொழிற்சாலை பாய்லரில் தவறி விழுந்த வாலிபர் பலி

திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த வலசை வெட்டிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் சீனிவாசன், 28.இவர் கடந்த 27 ம் தேதி மாலை போளிவாக்கம் பகுதியில் உள்ள ஸ்டார்பாக்ஸ் அட்டைப் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலைக்கு குடிபோதையில் சென்றார்அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் தடுத்து நிறுத்தியும் கேட்காமல் தொழிற்சாலைக்குள் புகுந்த சீனிவாசன் தப்பியோட முயன்றார்.அங்கு கொதிக்கும் பாய்லர் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக பாய்லரில் விழுந்துள்ளார்.இதில் படுகாயமடைந்த சீனிவாசன் சென்னை கே.எம்.சி., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் பலியானார். இது குறித்து சீனிவாசனின் தாய் கண்ணம்மாள் கொடுத்த புகாரின் படி மணவாளநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை