உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வு துவக்கம்

அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வு துவக்கம்

திருத்தணி, தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பாண்டிற்கான அரசு பொதுத்தேர்வு அடுத்த மாதம், 28ம் தேதி துவங்கி, ஏப்., 15ம் தேதி நிறைவடைகிறது.இந்நிலையில், திருத்தணி கல்வி மாவட்டத்தில்நேற்று பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு துவங்கியது. இம்மாதம், 28ம் தேதிக்குள் திருத்தணி வருவாய் கோட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் செய்முறை தேர்வு முடிக்க வேண்டும்.அந்த வகையில், திருத்தணி ஒன்றியம், இஸ்லாம் நகர் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் பாடத்திற்கான செய்முறை தேர்வு நேற்று துவங்கியது.தேர்வை பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியர் கோபி துவங்கி வைத்து பார்வையிட்டார். இந்த செய்முறை தேர்வில், 23 மாணவ - மாணவியர் பங்கேற்று தேர்வு எழுதினர். அப்போது ஆசிரியர் விஜயகுமார் தேர்வுவை கண்காணித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி